ஏர்பஸ் விமான நிறுவன வேலை நிறுத்தங்கள்... பணிந்த நிர்வாகம்
Airbus lets staff keep working from home after strikes: வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்ய அனுமதிக்கக் கோரி பணியாளர்கள் மேற்கொண்ட தொடர் வேலைநிறுத்தங்களுக்குப் பணிந்தது ஏர்பஸ் நிறுவனம்.
பிரான்ஸ் முதலான சில நாடுகளில், ஏர்பஸ் விமான நிறுவன பணியாளர்கள் வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்வதற்கு எதிராக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.

ஏர்பஸ் நிறுவன வேலை நிறுத்தங்கள்...
ஏர்பஸ் விமான நிறுவன தலைமை நிர்வாகியான Guillaume Faury என்பவர், வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்வது கோவிட் காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக இருந்தது.

ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது என்று கூறி, அனைவரும் மீண்டும் அலுவலகங்களுக்குத் திரும்பவேண்டும் என்று ஜூன் மாதம் அறிவித்திருந்தார்.
ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் ஏர்பஸ் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டார்கள்.
அதனால் பணிகள் பாதிக்கப்படவே, இனி பணியாளர்கள் வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தவண்ணம் வேலை செய்யலாம் என ஏர்பஸ் மேலாளர்கள் தற்போது தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |