இடைவிடாத விமான சேவை! புகழ்பெற்ற ஏர் கனடா நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் இருந்து கனடாவின் ரொறன்ரோவுக்கு இடைவிடாத விமான சேவையை ஏர் கனடா கொண்டு வரவுள்ளது.
2022 முதல் இந்த விமான சேவை மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏர் கனடா விமானங்கள் கன்ஸாஸ் நகருக்கு விமான சேவையை வழங்காமல் நிறுத்தி வைத்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ஏர் கனடா அடுத்த ஆண்டு மே மாதத்தில் ரொறன்ரோவுக்கு இடைவிடாத விமானங்களை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறையின் தரவு மூலம் தெரியவந்துள்ளது.
அந்த மாதத்தில் மட்டும் 30 விமானங்களை இயக்க விமான நிறுவனம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது கொரோனா காலத்துக்கு முன்பு இருந்தது போலவே 1500 இருக்கைகளுடன் விமான சேவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.