கனடாவின் ஏர் கனடா விமானங்கள் தொடர்பில் வெளியான ஒரு முக்கிய அறிவிப்பு!
கனடாவின் ரொறன்ரோவில் இருந்து ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டுக்கு வரும் கோடை காலம் முதல் மீண்டும் ஏர் கனடா விமானங்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் மே மாதம் முதல் அக்டோபர் வரையில் வாரத்திற்கு மூன்று முறை விமானங்கள் இயக்கப்படும் என புடாபெஸ்ட் விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்கனடாவானது Boeing 787-9 விமானத்தை இயக்கவுள்ளது. இது குறித்து புடாபெஸ்ட் விமான நிலையத்தின் விமான மேம்பாட்டு தலைவர் பலாஸ் போகட்ஸ் கூறுகையில், ஏர் கனடா நிறுவனத்தை மீண்டும் வரவேற்பதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.
இந்த விமான சேவையை மீண்டும் கொண்டு வர விமான நிறுவனம் மற்றும் ஹங்கேரிய சுற்றுலா வாரியத்துடன் இணைந்து நாங்கள் அயராது உழைத்துள்ளோம் என கூறியுள்ளார்.
ஏர்கனடா நிறுவனம் முதன் முதலில் கடந்த 2016ல் கனடாவில் இருந்து ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டுக்கு விமானத்தை இயக்க தொடங்கிய நிலையில் கொரோனா முதல் அலை உலகை அச்சுறுத்த தொடங்கியவுடன் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.