ட்ரம்ப் வருவதற்கு முன் ரிசார்ட் மீது பறந்த 3 விமானங்கள்! விதிமீறலால் பரபரப்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் ஜனாதிபதி ட்ரம்ப்பின் ரிசார்ட் மேல் 3 விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புளோரிடா ரிசார்ட்
புளோரிடா மாகாணத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு சொந்தமாக மார்-ஏ-லாகோ ரிசார்ட் உள்ளது.
இதன் வான்வெளியில் மூன்று பயணிகள் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் விண்வெளி பாதுகாப்பு துறையின் F-16 ரக போர் விமானங்கள் சோதனை பணியில் ஈடுபட்டது.
பின்னர் மூன்று பயணிகள் விமானங்களும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டன என்றும், அடிக்கடி இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்றுமுறை விதிமீறல்கள்
ஆனால், இந்த விமானங்கள் ஏன் பாம் பீச் வான்வெளியில் பறந்தன என்பது பற்றிய தகவல் எதுவும் இல்லை.
இதுதொடர்பாக உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள தகவலில், மார்-ஏ-லாகோவிற்கு ட்ரம்ப் வந்திருந்தபோது அந்த இடத்தின் மீது மூன்றுமுறை வான்வெளி விதிமீறல்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த 15 மற்றும் 17 ஆகிய திகதிகளிலும் இதேபோன்ற விதிமீறல்கள் நடந்துள்ளன.
இந்த நிலையில், அத்துமீறி பறந்த விமானங்களை F-16 ரக போர் விமானம் வெளியேற்றி பிறகு ட்ரம்ப் ரிசார்ட்டை சென்றடைந்தாக கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |