ஏர் இந்தியா பணியாளர்களை கடுமையாக தாக்கிய பயணி: நடுவானில் திரும்பிய விமானம்!
டெல்லியிலிருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பணியாளர்களோடு பயணி ஒருவர் சண்டையிட்டதால் விமானம் மீண்டும் டெல்லி நோக்கி திரும்பியுள்ளது.
விமான பணியாளர்கள் மீது தாக்குதல்
டெல்லியிருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்டது. அப்போது விமானத்தில் லண்டன் செல்லும் பயணி ஒருவர் கேபின் குழு உறுப்பினர்களோடு தகாத வார்த்தைகளை பேசி சண்டையிட்டுள்ளார்.
@representative image
இதில் கேபின் குழு உறுப்பினர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு கேபின் குழு உறுப்பினர்களுக்கு 'உடல் பாதிப்பை' ஏற்படுத்தியதாக விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீண்டும் திரும்பிய விமானம்
இதனை தொடர்ந்து விமான பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி லண்டன் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளது.
@filepicture
பயணிகள் தரையிறங்கியதும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர், மேலும் இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் டெல்லி விமான நிலைய காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.
அதில் “ஏப்ரல் 10, 2023 அன்று டெல்லி-லண்டன் ஹீத்ரோவை இயக்க திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI 111, விமானத்தில் இருந்த ஒரு பயணியின் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டெல்லி திரும்பியது” என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
@pti
"வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், பயணிகள் இரண்டு கேபின் குழு உறுப்பினர்களுக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவித்துள்ளார். எனவே விமானி டெல்லிக்கு திரும்ப முடிவு செய்தார், தரையிறங்கியதும் பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்” என்று ஏர் இந்தியா அளித்த புகாரில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு விமான நிறுவனம் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், இன்று பிற்பகல் லண்டனுக்கு புறப்படும் விமானத்தை மாற்றியமைத்துள்ளதாகவும் ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.