பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டுள்ள விமான சேவை: சைபர் தாக்குதல் தொடர்பில் எழுந்துள்ள கேள்வி
திங்கட்கிழமையன்று, பிரித்தானியா முழுவதும் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்கள் தொழில் நுட்பக் கோளாறு ஒன்றால் பாதிக்கப்பட்டதால் விமான சேவை கடும் பாதிப்புக்குள்ளானது.
சைபர் தாக்குதலா?
அந்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளம் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள்.
விமான போக்குவரத்து சகஜ நிலையை அடைய மேலும் சில நாட்கள் ஆகலாம் என பிரித்தானிய போக்குவரத்துத் துறை அமைச்சரான Mark Harper தெரிவித்துள்ளார்.
— British Airways (@British_Airways) August 28, 2023
அப்போது, அவரிடம், இந்த தொழில்நுட்பக் கோளாறின் பின்னணியில் சைபர் தாக்குதல் இருக்கக்கூடுமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், அந்த தொழில்நுட்பக் கோளாறு, சைபர் தாக்குதலின் விளைவாக இருக்கலாம் என அரசு அதிகாரிகள் கருதவில்லை என்று கூறினார்.
நமது தொழில்நுட்ப நிபுணர்களும், அந்த தொழில்நுட்பக் கோளாறை ஆராய்ந்து, அது சைபர் பாதுகாப்பு தொடர்பான விடயம் அல்ல என்பதை உறுதி செய்துள்ளார்கள் என்றார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |