சுவிட்சர்லாந்தில் விரைவில் சாலைகளில் விமானங்கள்: தயாராகும் திட்டம்
சுவிட்சர்லாந்தில் விரைவில் சில விமானங்கள் சாலைகளில் தரையிறங்கக்கூடும்.
ஓடுபாதைகளாகும் சாலைகள்
1070கள் 80களில், ஓடுபாதைகளாக பயன்படுத்துவதற்கெனவே பல சாலைகளின் பகுதிகள் உருவாக்கப்பட்டன. குறைந்தபட்சம் 2 கிலோமீற்றர் தொலைவுள்ள சில சாலைகள் சில விதிகளுக்குட்படும் நிலையில், அவை விமானம் தரையிறங்கும் ஓடுபாதைகளாக மாற்றப்படும்.
Swiss Dept Of Defence
1995ஆம் ஆண்டு இந்த திட்டம் கைவிடப்பட்டது. கடைசியாக போர் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் இறங்கியது Ticino மாகாணத்தில், 1991ஆம் ஆண்டில்...
தற்போது, மீண்டும் அந்த திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என விமானப்படைத் தளபதியான Major Peter Merz கூறியுள்ளார்.
சாலைகள், சுமார் 6 மணி நேரத்தில் ஓடுபாதைகளாக மாற்றப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.