பிரித்தானியாவில் விமானத்தை தவறவிட்ட நபர் அதை பிடிப்பதற்கு செய்த குறுக்கு வழி! கையும் களவுமாக பிடித்த பொலிசார்
பிரித்தானியாவில் பயணி ஒருவர் உரிய நேரத்தில் விமானநிலையத்திற்கு வராததால், அவர் செய்த மோசமான செயலால் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் East Midlands-ல் இருக்கும் East Midlands விமானநிலையத்தில் இருந்து 34 வயது மதிக்கத்தக்க நபர் போலாந்து செல்வதற்காக உள்ளூர் நேரப்படி காலை 6.15 மணிக்கு வந்துள்ளார்.
ஆனால், அவர் அதற்கான சரியான நேரத்திற்கு வரமால், சுமார் 30. நிமிடங்களுக்கு மேல் தமதாம வந்ததால், அவர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
அதன் பின் அவர் அந்த விமானத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக, பயணிகளின் லக்கேஜ்கள் பரிசோதிக்க பயன்படுத்தப்படும் baggage conveyor வழியாக செல்ல முயன்றார்.
— BTP Nottinghamshire (@BTPNotts) August 7, 2021
இதனால், பொலிசார் அவர் எச்சரித்ததுடன், பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தது என சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.
East Midlandsவிமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாதுகாப்பை மீற முயன்றதைத் தொடர்ந்து இன்று காலை விமான நிலையத்தில் ஒரு பயணி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை உடனடியாக விமான நிலைய காவல்துறையினர் கையாண்டனர். இதனால் விமானநிலையத்தில் எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.