பிரான்ஸில் விமான நிலையங்களில் இருந்து மக்கள் திடீரென்று வெளியேற்றம்: உயர் எச்சரிக்கையில் ஐரோப்பா
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பிரான்ஸ் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் இருந்து மக்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பிரான்சில் உள்ள Lille, Lyon, Nice, Nantes, Paris Beauvais Tillé மற்றும் Toulouse ஆகிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மக்களை வெளியேற்றி வலுக்கட்டாயமாக மூடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, Biarritz, Rennes, Strasbourg மற்றும் Bordeaux-Merignac ஆகிய விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறி, மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
பெல்ஜியம் மற்றும் பிரான்ஸில் சமீபத்தில் நடந்த பயங்கர தாக்குதல்களைத் தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பகல் 10 மணிக்கு தொலைபேசி ஊடாக Lille, Nice, Lyon மற்றும் Toulouse ஆகிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
@sun
உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டதுடன், மோப்ப நாய்களுடன் சிறப்பு அதிகாரிகள் குழு களமிறக்கப்பட்டனர். இதனிடையே, Toulouse, Lille, மற்றும் Lyon விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் தற்போது புறப்படுவதாக இல்லை என அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது.
உச்சகட்ட எச்சரிக்கை நிலையில்
பாரிஸ் நகரில் அமைந்துள்ள Beauvais விமான நிலையமும் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பயணிகளை வெளியேற்றியுள்ளனர். ஆனால், தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பின்னர், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை வெர்சாய்ஸ் அரண்மனை வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் திடீரென்று வெளியேற்றப்பட்டனர். ஆனால் மதியத்திற்கு மேல் வெர்சாய்ஸ் அரண்மனைக்கு பார்வையாளர்களை அனுமதித்தனர்.
@sun
வாரத்தின் தொடக்கத்தில் ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதையடுத்து, பிரான்ஸ் அதன் உச்சகட்ட எச்சரிக்கை நிலையில் உள்ளது. 57 வயதான Dominique Bernard என்ற ஆசிரியர் செச்சென் அகதி இளைஞரால் கத்தியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.
இஸ்ரேல் விவகாரத்தை அடுத்து முன்னாள் ஹமாஸ் தலைவர் விடுத்த கோபத்தை வெளிப்படுத்தும் நாள் என்ற அழைப்பை ஏற்றே இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |