53-வது பிறந்தநாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் பச்சன் - சொத்து மதிப்பு 100 மில்லியன் டொலர்
Aishwarya Rai Bachchan Net Worth and Career: நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.
53வது பிறந்தநாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று (நவம்பர் 1) தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் மற்றும் திரைப்பட உலகினர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய திரைப்பட உலகில் தனது பயணத்தை தொடங்கி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற முகமாக உயர்ந்துள்ளார். 28 ஆண்டுகளாக நீடிக்கும் அவரது திரைப்பட வாழ்க்கை, சர்வதேச பிராண்டுகளுடன் இணைந்த விளம்பர ஒப்பந்தங்கள், மற்றும் முதலீடுகள் ஆகியவை அவரது பெரும் செல்வத்திற்கு காரணமாகும்.
சொத்து மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டொலர்
Celebrity Net Worth இணையதளத்தின் தகவலின்படி, ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்து மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய நடிகைகளில் மிக உயர்ந்த மதிப்பாகும்.
அவரது கணவர் அபிஷேக் பச்சனின் சொத்து மதிப்பு சுமார் 33 முதல் 34 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது. இருவரும் திரைப்படம், விளம்பரங்கள், மற்றும் வணிக முதலீடுகள் மூலம் பெரும் வருமானம் ஈட்டுகின்றனர்.
ஐஸ்வர்யா பல ஆண்டுகளாக சர்வதேச அழகு சாதன நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடராக உள்ளார். மேலும், சுவிஸ் லக்ஷுரி கடிகார நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தம் வைத்துள்ளார்.
பச்சன் குடும்பம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல அடுக்கு மாடி வீடுகள் மற்றும் வில்லாக்களை வைத்துள்ளது. குறிப்பாக, துபாயில் உள்ள Sanctuary Falls பகுதியில் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள வில்லா அவர்களின் சொத்துகளில் ஒன்று. மும்பையில் பல அடுக்குமாடி குடியிருப்புகளும் அவர்களிடம் உள்ளன.
ஐஸ்வர்யாவின் கடைசி திரைப்படம் மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன் II” (2023) ஆகும். இதில் அவர் நந்தினி மற்றும் ஊமை ராணி (மந்தாகினி தேவி) என இரு கதாபாத்திரங்களில் நடித்தார். அவரது சர்வதேச புகழும், பிராண்டு ஒப்பந்தங்களும், திரைப்படப் பயணமும் இன்னும் அவரை உலகளவில் பிரபலமாக வைத்திருக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |