உலக அழகியாவதற்கு முன் ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
திரையுலகிற்கு வருவதற்கு முன் மொடலாக வேலை பார்த்தபோது, நடிகை ஐஸ்வர்யா ராய் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வைரலாகியுள்ளது.
உலக அழகி
பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய் 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார்.
அதனைத் தொடர்ந்து 1997ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார்.
ஆனால், அவர் உலக அழகி பட்டம் வெல்வதற்கு முன் மொடலிங் செய்தபோது வாங்கிய சம்பளம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பளம்
1992ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி மாத இதழ் ஒன்றுக்காக ரூ.1500ஐ சம்பளமாக ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai) பெற்றார்.
ரெடிட் பயனர் செய்த பதிவின் மூலம் இது தெரிய வந்துள்ளது. இதில் ஐஸ்வர்யாவின் கையொப்பமும், ராம் லட்சுமி நிவாஸில் அவர் அப்போது வசித்து வந்த முகவரியும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |