இளம் நடிகருடன் காதல்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் திருமணம்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இளம் நடிகர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேசப்படுகிறது.
பிரபல நடிகரான தனுஷை 2004ம் ஆண்டு காதலித்து கரம்பிடித்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ள நிலையில், விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தனர்.
இவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டாலும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது, தங்களது முடிவில் இருவருமே உறுதியாக இருக்கின்றனர்.
தொடர்ந்து அவரவர் வேலைகளிலும் இருவருமே பிஸியாகிவிட்டனர், இந்நிலையில் இளம் நடிகர் ஒருவரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அந்த நடிகருடன் ஐஸ்வர்யா அடிக்கடி வெளியில் சுற்றி வருவதாகவும் பேசப்படுகிறது, யார் அவர் என பலரும் தேடினாலும் அதற்கான விடை கிடைக்கவில்லை.
உண்மை என்ன என்பதை ஐஸ்வர்யாவே தெரிவித்தால் மட்டுமே உண்டு.
விஷால் விஷ்ணு மற்றும் விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவுபெற்றுள்ளது.
இப்படத்தில் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |