சங்கி கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா கூறவில்லை., நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
ஜனவரி 22ஆம் திகதி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி சென்றதால் அவரை சிலர் சங்கி என்று அழைத்தனர்.
இதற்கு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார்.
"அப்பாவை அப்படி கூப்பிடாதீங்க, அவர் சங்கி இல்லை. அவர் சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் போன்ற படத்தில் நடித்திருக்க மாட்டார்" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த வார்த்தைக்கு வேறு அர்த்தம் இருந்தது. சங்கி என்ற வார்த்தையை ஐஸ்வர்யா எதிர்க்கிறார். அது கெட்ட வார்த்தை என்ற அர்த்தத்தில் அவர் பேசியதாக எதிர்ப்பு கிளம்பியது.
தற்போது ரஜினிகாந்த் அதை தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்காக வந்திறங்கிய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசியதுடன், மகள் கூறியதை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
ஐஸ்வர்யா சங்கியை கெட்ட வார்த்தையாகக் குறிப்பிடவில்லை. என் தந்தையை பற்றி ஏன் இப்படி விளம்பரம் செய்கிறீர்கள் என்று தான் கேட்டார் என கூறினார்.
"சங்கி எனபது கேட்ட வார்த்தை எனறு ஐஸ்வர்யா எங்கயும் சொல்லவில்லை., அப்பா ஆன்மீகவாதி எல்லா மதங்களையும் விரும்புபவர், அவரை என் அப்படி சொல்கிறார்கள் என்பது அவரது பார்வை" என்று அவர் ஐஸ்வர்யாவின்கருத்துக்களை விளக்கி கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Rajinikanth defends daughter Aishwarya, dad is not Sanghi, Sanghi as bad word, Lal Salaam, Aishwarya Rajinikanth Sanghi controversy