விவாகரத்துக்கு பிறகு காதலர் தினத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்!
தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அண்மையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே அறிவித்தனர்.
இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாக உள்ளனர். இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் ஐஸ்வர்யாவும் நண்பர்களுடன் கேக் வெட்டி காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார். அதோடு புதுபாடல் ஒன்றினை குறித்த புரோமோ வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.
இதன்மூலம் பாடலின் இசையமைப்பாளர் அன்கித் திவாரி என்பதும் இந்த பாடலை தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த்தும், தமிழில் அனிருத் பாடுவது குறிப்பிடத்தக்கது.