உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஐஸ்வர்யா ராயின் 12 வயது மகள்
ஐஸ்வர்யா ராயின் 12 வயது மகள் தன்னை பற்றி யூடியூப் சேனல்களில், தவறான செய்தி பரப்புவதாக யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யா ராயின் மகள்
கடந்த 1994 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற ஐஸ்வர்யா ராயிற்கு(aiswarya rai) நடிப்பின் மீது தீராத காதலிருந்தது.
இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே சிறந்த நடிகையாக அறியப்பட்ட ஐஸ்வர்யா ராய் மெதுவாக தமிழ் சினிமா மற்றும் பாலிவுட்டில் பல படங்களை நடித்து பிரபலமானார்.
@madrastakies
அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாவிற்கும் காதல் திருமணம் நடைபெற்றது. இவரது மகளான ஆராத்யா பச்சனுக்கு 12 வயதாகிறது.
இந்நிலையில், ஆராத்யா பச்சன்(aradhya bachchan) குறித்து தவறான வதந்தி ஒன்றை 10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவதூரான கருத்து
இந்த விவகாரத்தை சும்மா விடக் கூடாது என நினைத்து ஐஸ்வர்யா ராயின் மகள், துணிந்து செய்துள்ள காரியம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும், அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூடியூப் சேனல்கள் சமீபத்தில் வதந்தி ஒன்றை பரப்பியுள்ளன.
இந்நிலையில், தவறான உள்நோக்கத்துடன் இப்படியொரு வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
@filmfare.com
அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் மேலும், அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என ஆராத்யா பச்சன் வழக்கறிஞர்களான ஆனந்த் மற்றும் நாயக் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆராத்யா தான் மைனர் என்பதால் ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் . அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.