ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டு நகைகளை திருடிய பணிப்பெண்: 95 லட்சத்தில் இடம் வாங்கி, வீடு கட்டியது அம்பலம்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகையை திருடிய பணிப்பெண் வீடு வாங்கி வாடகைக்கும் விட்டிருப்பது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காணாமல் போன நகைகள்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகளை காணவில்லை என ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
மேலும் வீட்டில் வேலை செய்த பெண்ணின் மீது சந்தேகமிருப்பதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஈஸ்வரி என்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈஸ்வரி தனது கணவருக்கு வங்கி மூலமாக பணப்பரிமாற்றம் செய்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
நெருங்கிப் பழகிய பணிப்பெண்
ஈஸ்வரி சென்னையிலுள்ள மந்தைவெளிப் பகுதியை சேர்ந்தவர். இவரது கணவரான அங்கு முத்து, ஈஸ்வரியை கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறார்.
@oneindia
சில வருட பழக்கத்தில் ஐஸ்வர்யாவிடம் சகஜமாக பேசி பழகும் அளவிற்கு நெருக்கமாகி விட்டார். மேலும் வீட்டில் ஐஸ்வர்யா எங்கு லாக்கர் சாவியை வைக்கிறார் என்பது முதல் கொண்டு தெரிந்து வைத்திருக்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி பணம் சேர்த்துள்ளார். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு வங்கியில் கடன் வாங்கி சோழிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்திற்கு நிலம் வாங்கியுள்ளார். அதில் பிரமாண்டமான வீடு கட்டினார் என கூறப்படுகிறது.
திருடியதை ஒப்புக்கொண்ட ஈஸ்வரி
காவல் துறையினர் ஆதாரங்களை வைத்து ஈஸ்வரியை விசாரணை நடத்தியதில் தான் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
100 சவரன் நகைகள், 30 கிராம் வைர நகைகள், வெள்ளிப் பொருட்களை மைலாப்பூரிலுள்ள நகைக் கடையில் விற்றுள்ளார். அந்த பணத்தை வைத்து வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
இதற்கிடையே வேலைக்கார பெண் ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்ததாக கார் ஓட்டுநர் வெங்கடேசன் என்பவரை காவல் துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
இவர் நடிகர் ரஜினிகாந்திடம் கார் ஓட்டுநராக வேலை பார்த்தவர். மேலும் காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.