தோனி ஓய்வுக்கு பிறகும் தினேஷ் கார்த்திக் எப்படி கலக்குறாரு பாருங்க! தமிழனை புகழ்ந்த ஜாம்பவான்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அஜய் ஜடேஜா தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து பேசியுள்ளார்.
37 வயதான தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் கம்பேக் கொடுத்து தனது அபாராமான பேட்டிங்கால் எதிரணிகளை கலங்கடித்து வருகிறார். அவர் குறித்து பேசிய இந்திய அணி முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, தினேஷ் கார்த்திக் தோனிக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, இத்தனை வருடத்திற்கு பிறகும், தோனி ஓய்வு பெற்றப் பிறகும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.
GETTY
இது சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளவே முடியாது. அவர் எந்த அளவுக்கு உழைத்திருப்பார் என யோசித்துப் பாருங்கள். தினேஷ் கார்த்திக் நினைத்திருந்தால் வர்ணனையாளராக செயல்பட்டு, சுலபமாக வருமான ஈட்டியிருக்கலாம்.
ஆனால், அவர் தனது லட்சியத்தை முதன்மைப்படுத்தி, இன்று சாதித்து காட்டி அசத்தியுள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
Twitter