கண்ணீருடன் ஓய்வை அறிவித்த அஜிங்கியா ரஹானே - எந்த கேப்டனும் செய்யாத சாதனை
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஜிங்கியா ரஹானே அறிவித்துள்ளார்.
அஜிங்கியா ரஹானே ஓய்வு
மஹாராஷ்டிராவை சேர்ந்த அஜிங்கியா ரஹானே, 2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியதால் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

ஒருநாள், டெஸ்ட், T20 ஆகிய 3 வகையான போட்டிகளிலும் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 26 அரைசதம், 12 சதம் உட்பட 5,077 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 24 அரைசதம், 3 சதம் உட்பட 2,962 ஓட்டங்களும், 20 சர்வதேச T20போட்டிகளில் விளையாடி, 1 அரைசதம் உட்பட 375 ஓட்டங்களும் குவித்துள்ளார்.
அஜிங்க்யா ரஹானேவின் தலைமையின் கீழ் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டியில் சமன் செய்துள்ளது.
இதன் மூலம், 5க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கி ஒரு போட்டிகளில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய கேப்டனாக உள்ளார்.
இவரது தலைமையின் கீழ் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இவரது தலைமையிலான இந்திய அணி, இதுவரை ஒரே ஒரு T20 போட்டியில் மட்டும் தோற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஜிங்க்யா ரஹானே 8 கேட்சுகளைப் பிடித்துள்ளார். இதுவே டெஸ்ட் வரலாற்றில் ஒரு பீல்டர் பிடித்த அதிக கேட்சுகள் ஆகும்.

இவரது தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் 2020-21 பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை வென்றது.
ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

2025 ஐபிஎல் தொடர் முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அணித்தலைவராக அணியை வழிநடத்தி வந்தார்.
இந்நிலையில், சர்வதேச மற்றும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அஜிங்கியா ரஹானே இது குறித்து கண்ணீர் மல்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |