இலங்கை டெஸ்டில் அஜிங்க்யா ரஹானேயின் புதிய அவதாரம்
இலங்கை-இந்தியா டெஸ்ட் தொடரில் அஜிங்க்யா ரஹானே வர்ணனையாளராக அறிமுகமாகவுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், அஜிங்க்யா ரஹானே இந்தியா, இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.
அஜிங்க்யா ரஹானே
இந்திய கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக இருந்த அஜிங்க்யா ரஹானே, கடந்த மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதன்மூலம் தனது முதல் தர கிரிக்கெட் அறிமுகத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் நீடித்த சிறப்பான விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், ரஹானே வர்ணனையாளர் எனும் புதிய பணியை தொடங்கவுள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் ரஹானே வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.
"சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் சோனி லிவ் ஆகியவற்றில் இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் கிரிக்கெட் வர்ணனையாளராக அறிமுகமாவதில் நான் மிகுந்த உற்சாகமடைகிறேன்" என ரஹானே கூறியதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |