உங்கள் ஆதரவால் ஆசீர்வதிக்கப்பட்டது! 29 பந்தில் 71 ஓட்டங்கள் விளாசிய CSK வீரர் நெகிழ்ச்சி
கொல்கத்தா அணிக்கு எதிராக அதிரடியாக அரைசதம் விளாசிய CSK ரஹானே நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
CSK அபார வெற்றி
ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணியில் அஜிங்கியா ரஹானே 29 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்கள் விளாசினார். கான்வே 56 ஓட்டங்களும், தூபே 50 ஓட்டங்களும் எடுத்தனர்.
@AP
ரஹானேயின் விஸ்வரூப ஆட்டம்
இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகள் பெற்று சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய ரஹானே ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ரஹானே, 'எல்லோருடைய ஆதரவினாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். நகர்கிறோம்' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Blessed with all the support. We move ? @ChennaiIPL ? pic.twitter.com/IRwI0H8G5W
— Ajinkya Rahane (@ajinkyarahane88) April 24, 2023