துபாயில் இருந்து திரும்பிய அஜித்- Mahindra BE 6 காரை வாங்கி, சாய்பாபா கோவிலில் தரிசனம்
நடிகரும் சர்வதேச ரேசருமான அஜித் குமார், சமீபத்தில் துபாயிலிருந்து இந்தியா திரும்பினார்.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக சில நாட்கள் துபாயில் சிக்கியிருந்த அவர், இந்தியா வந்தவுடன் முதலில் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
அங்கு கோவில் நிர்வாகத்தினர் அவரை வரவேற்று, சாய்பாபா சிலையும், சால்வையையும் வழங்கினர். அஜித், கோவிலில் பிரார்த்தனை செய்து, பின்னர் நிர்வாகத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதன்பின், அஜித் “Tango Red” நிறத்தில் BE 6 Formula E காரை வாங்கியுள்ளார்.

இந்த SUV, Formula E கார் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டதாகும். FE2 மொடல் ரூ.23.69 லட்சம் மற்றும் FE3 மொடல் ரூ.24.49 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கார் அதிகபட்ச வேகம் மணிக்கு 202 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது. மஹிந்திரா எலக்ட்ரிக் SUV-கள் அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில், அஜித் கார் வாங்கிய புகைப்படங்கள், கேக் வெட்டும் நிகழ்வு மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டம் பகிரப்பட்டுள்ளது.
அஜித் குமார், இந்தியாவை உலக ரேஸிங் அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதால், இந்த கார் வாங்கிய செய்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ajith Kumar Mahindra BE 6, Ajith new car 2026, Mahindra Formula E SUV price, Ajith Sai Baba temple visit, Ajith Dubai return news, Mahindra BE6 Tango Red variant, Ajith Kumar racing car purchase #AjithKumar #MahindraBE6 #TamilCinema #FormulaE #SaiBaba #IndiaNews #CelebrityLifestyle