80 கி.மீ. தொலைவில் அரசு வேலை கொடுத்திருக்காங்க.., மதுரையிலேயே பணி வழங்க அஜித்குமாரின் சகோதரர் ஆதங்கம்
மதுரையிலேயே அரசு பணி வழங்க வேண்டும் என்று உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் திடீரென ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
அஜித்குமாரின் சகோதரர் ஆதங்கம்
அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்றது. இதற்காக வருகை தந்திருந்த அஜித்குமாரின் சகோதரர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "நகை திருட்டு புகார் தொடர்பாக எனது சகோதரர் அஜித் குமாரை பொலிஸார் தாக்கினர்.
அதுமட்டுமல்லாமல், என்னையும் பொலிஸார் தாக்கினர். இதனால் எனக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தற்போது எனக்கு காரைக்குடி ஆவினில் தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இது அரசு வேலை இல்லை.
மேலும், ஆவின் அலுவலகமானது 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. எனக்கு மதுரையிலே அரசு துறையில் பணி வழங்க வேண்டும். மேலும், வளர்ச்சி அடையாத பணியில் எங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கியதில் திருப்தி இல்லை.
எனது சகோதரர் உயிரிழப்பிற்கு காரணமான காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என்றார்.
மேலும், விசாரணையின் போது "நவீன்குமாருக்கு வழங்கப்பட்ட ஆவின் பணி, அரசுப் பணியல்ல என்று தெரிவித்ததற்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தான் ஆவின் நிறுவனம் இருக்கிறது" என்று நீதிபதிகள் கூறினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |