அஜித்குமார் வழக்கு: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முக்கிய சாட்சி புகார்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமாரை காவலர்கள் பிரம்பால் அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை கிளப்பியது, இந்த வீடியோ முக்கிய சாட்சியாக கருதப்படும் நிலையில், இதனை பதிவு செய்த சத்தீஸ்வரன் தனக்கும் தன் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக டிஜிபி-யிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் அஜித்குமார் வழக்கில் கைதான ராஜா காவலர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே உயர்பொலிஸ் அதிகாரிகளின் கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைப்பதற்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பில் அனைத்து மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டுகள், மண்டல ஐ.ஜிக்கள், பொலிஸ் கமிஷ்னர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.