அஜித் குமார் லாக் அப் மரணம்: விசாரணையை 9 மாதங்களுக்கு முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Ajith Kumar custodial death Court directs 9 month deadline: அஜித் குமார் லாக் அப் மரணத்தில் விசாரணையை 9 மாதங்களுக்கு முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் குமார்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பெண் ஒருவரின் 9.5 சவரன் தங்க நகையும், ரூ.2500 பயணமும் திருடப்பட்டதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் காவல் பணியில் இருந்த 29 வயது அஜித் குமார் தனிப்படை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் அடுத்த நாளே அஜித் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் போது கோவில் ஊழியர் ஒருவர் ரகசியமாக பதிவு செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதில் சீருடை அணியாத காவலர் ஒருவர் அஜித் குமாரை கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது.
காவல்துறையினர் கைது
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மத்திய புலனாய்வு அமைப்புக்கு(CBI) மாற்றப்பட்டது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் 6 காவலர்களை கைது செய்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் 2025ம் ஆண்டு டிசம்பரில் மேலும் 4 அதிகாரிகளின் பெயர்களை துணை குற்றப்பத்திரிகையில் CBI இணையத்தது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் 2026 செப்டம்பர் 10ம் திகதி, கீழ் நீதிமன்றம் 10 காவலர்கள் மீதும் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்து நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.
9 மாதங்கள் கால அவகாசம்
இந்நிலையில் அஜித் குமார் லாக் அப் மரணத்தில் விசாரணையை 9 மாதங்களுக்கு முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணைக்கு 10 பிரதிவாதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தால் அதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.