அஜித்குமார் கொலை.., புகாரளித்த நிகிதா அண்ணாமலையுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் பொலிஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது.
அடித்தே கொலைசெய்யப்பட்ட வாலிபர் அஜித்குமார், காரில் இருந்த தனது 10 சவரன் நகையை திருடிவிட்டதாக பேராசிரியையான நிகிதா என்பவர் புகார் அளித்திருந்தார்.
இதன்பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்யாமல் அடித்து விசாரித்த போதுதான் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
நிகிதா தனது அதிகார செல்வாக்கை பயன்படுத்தி சென்னையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு பேசி, அஜித்குமாரை சட்டவிரோதமாக காவலில் எடுத்து கடுமையாக தாக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தவகவல்கள் வெளிவந்தன.
இதனைத்தொடர்ந்து நிகிதா வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் வரையில் மோசடி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி வரும் நிகிதா தீவிர பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு ஆதரவாக தொடர்ந்து பல்வேறு பதிவுகள் வெளியிட்டு வந்துள்ளார்.
பாஜக அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக, அவரைப் பாராட்டி பல்வேறு பதிவுகள் வெளியிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நிகிதா பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதில் உள்ள பெண் நிகிதா இல்லை என்ற உண்மை தகவல் வெளிவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |