அஜித் குமாரின் புதிய ரேஸிங் கார்: Porsche GT3 RS வேகம், விலை, அம்சங்கள்
அஜித் குமாரின் புதிய Formula1 ரேஸிங் காரான Porsche GT3 RS-ன் வேகம், விலை மற்றும் அதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்கலாம்.
நடிகர் அஜித் குமார் முன்னணி நடிகர் என்பதைத் தாண்டி, மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகத்திலும் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார்.
தற்போது, அவர் கார் பந்தயத்தில் (Car Racing) மீண்டும் பங்கேற்க உள்ளார்.
இந்த முறை, அவரது புதிய ரேசிங் கார் மற்றும் அதன் அதிநவீன அம்சங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
அஜித் குமாரின் ரேசிங் கார் மற்றும் அதிநவீன அம்சங்கள்
அஜித் குமார் தனது Ajith Kumar Racing அணியுடன் 2025 ஜனவரியில் நடைபெறவுள்ள 24H Dubai Race தொடரில் பங்கேற்க உள்ளார்.
பந்தயத்திற்காக அவர் தேர்ந்தெடுத்த கார் Porsche GT3 RS.
இந்த கார் வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களின் அற்புத வடிவமைப்புடன் மெருகூட்டப்பட்டுள்ளது.
திறன் மற்றும் வேகம்
Porsche GT3 RS ஒரு அதிவேக கார். இது 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் அடையும் திறன் கொண்டது.
இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 296 கிலோமீற்றர் ஆகும்.
இதன் 4 லிட்டர் திறன் கொண்ட எஞ்சின் மற்றும் ஏரோடினாமிக் வடிவமைப்பு பந்தயத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை
இந்த காரின் வணிக மாடலின் இந்திய விலை சுமார் ரூ.3.5 கோடி ஆகும்.
அதே நேரத்தில், அஜித் குமார் இதை சிறப்பாக மாற்றியமைக்க ரூ.4 கோடி வரை செலவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டார் ஸ்போர்ட்ஸில் அஜித்தின் ஆர்வத்திற்கான மற்றொரு சான்றாக, அவர் Formula BMW Asia Championship உட்பட பல்வேறு தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
அஜித் குமார் திரை உலகத்தை தாண்டி ரேஸிங் உலகில் தன்னுடைய தனித்தன்மையையும் நிரூபிக்கிறார் என்பதற்கு அவரது பங்களிப்புகள் மிகப்பாரிய உதாரணமாக உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Thala Ajith Kumar, Ajith Kumar Racing Car Features, Ajit Kumar Racing, 24H Dubai Race, Ajith Kumar's new Porsche GT3 RS for racing, Price Of Porsche GT3 RS car