நடிகர் அஜித் நைஸ் ஜென்டில்மேன்...திருச்சி காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி புகழாரம்!
உண்மையிலேயே நடிகர் அஜித் நைஸ் ஜென்டில்மேன் என திருச்சி ரைபிள் கிளப் நிகழ்வு குறித்து பேசிய காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குநர் H. வினோத் இயக்கி வரும் ஏகே 61 என்ற பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், தனது ஓய்வு நாள்களை கழிப்பதற்காக ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த நடிகர் அஜித், அதனை முடித்துக் கொண்டு நேரடியாக ஜூலை 27ம் திகதி திருச்சி ரைபிள் கிளப்பில் வைத்து நடைபெற்ற 47 வது தமிழ்நாடு ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.
This is mind-boggling... Giving Citizen climax vibes...#AjithKumar pic.twitter.com/NjGcmdDbQc
— CL Ramakrishnan (@kishen05journo) July 27, 2022
இதுத் தொடர்பான தகவல் அங்குள்ள மக்களிடையே வேகமாக பரவிய நிலையில், நடிகர் அஜித் குமாரை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் பெருமளவு கூடி காத்து இருந்தனர்.
இதனை அறிந்த நடிகர் அஜித் குமார் ரசிகர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார், மேலும் இவை தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் வருகையை முன்னிட்டு ஷூட்டிங் கிளப்பில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து செய்தியாளர்களை சந்திந்த திருச்சி காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி உண்மையிலேயே நடிகர் அஜித் நைஸ் ஜென்டில்மேன் எனத் தெரிவித்துள்ளார்.
#NewsUpdate | “உண்மையிலேயே நடிகர் அஜித் ஒரு நைஸ் ஜென்டில்மேன்” -திருச்சி ரைபிள் கிளப் நிகழ்வு குறித்து காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி ஓபன் டாக்#SunNews | #Trichy | #Ajith | #AjithFans | #TrichyRifleClub pic.twitter.com/WQnBMN1ar6
— Sun News (@sunnewstamil) July 29, 2022
அத்துடன் ரசிகர்கள் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை செய்கிறேன் எனத் தெரிவித்தார் என்றும் காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: வாஷிங் மெஷினுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுவன்: அமெரிக்காவில் பரபரப்பு!
மேலும் ரசிகர்களை கட்டுப்படுத்த எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார், இறுதியில் அனைத்து காவலர்களிடமும் நன்றி கூறி விட்டுச் சென்றார் என்றும் காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.