24 மணி நேரம் ஓய்வே கிடையாது.,துபாயில் நடைபெறும் 24 Hours ரேஸ்: முழு விவரம்
நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் 24 Hours ரேஸ் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் தொடங்கியுள்ளது.
பொதுவாக திரைப் பிரபலங்கள் நடிப்பை தாண்டி பல விஷயங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது உண்டு, அந்த வகையில் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் தற்போது துபாயில் நடைபெறும் 24 Hours ரேஸில் தனது குழுவினருடன் கலந்து கொண்டு உள்ளார்.
இந்த போட்டிக்கான பயிற்சியின் போது கூட நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது, மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடங்கியது கார் ரேஸ்
பயிற்சி ஓட்டங்கள் நிறைவடைந்து, இன்று அஜித் குமார் பங்கேற்கும் 24 Hours ரேஸ் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் இன்று தொடங்கியுள்ளது.
இந்த 24 Hours ரேஸின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால், ஒவ்வொரு ரேஸிங் டீமுக்கும் 2 முதல் 4 டிரைவர்கள் என இருப்பார்கள். அந்த அணியின் கேப்டன் தான் ரேஸில் குறைந்தபட்சம் 60-70% நேரத்திற்கு காரை ஓட்ட வேண்டும்.
அதாவது 14 முதல் 18 மணி நேரம் கேப்டன் தான் இந்த ரேஸில் காரை ஓட்ட வேண்டும்.
சினிமாவை தாண்டி தனது Passionஐ நோக்கி பயணிக்கும் அஜித்தின் டீம் ஜெயிப்பதை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
இந்த போட்டி குறித்த முழு விவரத்தை கீழே காணுங்கள்,