விஜயின் The Goat திரைப்படம்.., முதல் ஆளாக தளபதிக்கு வாழ்த்து கூறிய அஜித்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் அதிகாலை 4 மணி மற்றும் 6 மணிக்கே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.
தமிழகத்தில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகளும் கோயம்புத்தூர் பிராட்வே சினிமா திரையரங்கில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.

'The Goat' திரைப்படம் வெளியாகுவதை முன்னிட்டு இரவிலிருந்தே ரசிகர்கள் தியேட்டர்களின் வாசல்களில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 'The Goat' திரைப்படம் வெற்றியடைய நடிகர் விஜய்க்கு அஜித் வாழ்த்து கூறியதாக இயக்குநர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
Thank q #Thala #AK my anna for the first wish for @actorvijay na, me and team #GOAT we all love u❤️?? pic.twitter.com/81i7biJrBm
— venkat prabhu (@vp_offl) September 4, 2024
வெங்கட் பிரபு தனது பதிவில், "எனது அண்ணன் அஜித் தான் 'The Goat' படம் வெற்றியடைய விஜய் மற்றும் எங்கள் குழுவை வாழ்த்திய முதல் நபர். அதற்கு நன்றி. நாங்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |