பாக்ஸ் ஆபீஸில் அக்ஷய், சன்னி தியோலை முந்திய தமிழ் நடிகர்: யார் அவர்?
இந்திய பாக்ஸ் ஆபீஸில் அக்ஷய் குமார், சன்னி தியோலின் திரைப்படங்களைவிட அதிக வசூலைக் குவித்துள்ளது ஒரு தமிழ் நடிகரின் திரைப்படம்.
யார் அந்த நடிகர்?
அந்த நடிகர், அஜித் குமார். ஆம், ஏப்ரல் மாத நிலவரப்படி, அஜித் நடித்த குட், பேட், அக்லி திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் 183 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த தமிழ்த் திரைப்படம் என்னும் பெருமையும் அந்த படத்துக்குக் கிடைத்துள்ளது.
குட், பேட், அக்லிக்கு அடுத்த இடத்திலிருப்பது மோகன்லால் நடித்த துடரும் என்னும் மலையாளத் திரைப்படம். அந்த திரைப்படம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சந்தையிலிருந்து 148 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளது.
அக்ஷய் குமாரின் கேசரி பாகம் 2 மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அது 107 கோடி சூபாய் வசூலைக் குவித்துள்ளது.
அடுத்தபடியாக, சன்னி தியோலின் Jaat திரைப்படம் 103 கோடி சூபாய் வசூலைக் குவித்துள்ளது.
2025 ஏப்ரல் மாத நிலவரப்படி, 100 கோடி வசூலைத் தாண்டிய திரைப்படங்கள் இவை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |