ஓமம் நீரை குடிப்பதனால் கிடைக்கும் அற்புத மருத்துவ பயன்கள்! இந்த பிரச்சனைக்கு கூட தீர்வு
ஓமம் பலரின் வீட்டின் சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள். ஓமத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் பச்சை ஓம விதைகளை சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
ஓமத்தை (Ajwin) நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
ஓமம் அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது. ஓமம் விதைகளில் உள்ள செயலில் உள்ள நொதிகள் செரிமான செயல்பாடுகளை அதிகரித்து இரைப்பை சாறுகளை வெளியிட உதவுகிறது.
cholas
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம்.
வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து.
இயற்கையாக உடல் எடையை குறைக்க விரும்பினால், தினசரி உணவில் ஓமம் விதைகளை சேர்த்துக்கொள்ளலாம்.
சளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓமத்தின் நீரை பயன்படுத்தலாம். காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு, ஓமம் ஒரு சிறந்த மருந்தாகும்.
food.ndtv.