ஒரே நிமிடத்தில் 700 குண்டுகள் பாயும் AK- 203 ரக துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிப்பு
இந்தியா மாநிலம் ஒன்றில் இந்தியா-ரஷ்யா நிறுவனங்கள் கூட்டாக தயாரிக்கும் AK- 203 ரக துப்பாக்கிகள் தயார் செய்யப்படுகிறது.
AK- 203 ரக துப்பாக்கிகள்
இந்தியா-ரஷ்யா நிறுவனங்கள் கூட்டாக தயாரிக்கும் துப்பாக்கி தொழிற்சாலையானது உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் உள்ளது. இங்கு, AK- 203 ரக துப்பாக்கிகள் தயார் செய்யப்படுகிறது.
இதற்கு ‘ஷேர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது, ஒரே நிமிடத்தில் 700 குண்டுகளை, 800 மீட்டர் இலக்குவரை சுடும் திறன் கொண்டது.
இந்த நிறுவனத்துடன் இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட AK-203 ரக துப்பாக்கிகளை வழங்க ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த நிறுவனமானது தற்போது வரை 48,000 துப்பாக்கிகளை விநியோகம் செய்துள்ள நிலையில் அடுத்த 3 வாரத்திற்குள் 7,000 துப்பாக்கிகளை விநியோகம் செய்யவுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் 15,000 துப்பாக்கிகள் விநியோகிக்கப்படவுள்ளன. இவை, ஏ.கே-47 மற்றும் ஏகே-56 துப்பாக்கிகளை விட மிகவும் நவீனமானவை.
மேலும், 3.8 கிலோ எடை மற்றும் 705 எம்எம் நீளம் கொண்டவை. இந்த துப்பாக்கிகள் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |