பிரபல தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினிக்கு நடைபெற்ற திருமணம்! புதுமணத்தம்பதி புகைப்படங்கள்
தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி அகல்யா வெங்கடேசனுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
வெள்ளித்திரையிலும் நடிகையாக நடித்த அகல்யாவிற்கும் அருண் குமார் என்பவருக்கும் இன்று காலை திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
அருண் குமார் தமிழ்நாடு காவல் துறையில் சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இரு வீட்டுப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது! இந்த திருமணத்தில் பெரிய அளவில் சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை.
Happily married?? pic.twitter.com/Z7gguTzFLh
— Akalya Venkatesan (@iamakalya) May 4, 2022
இரு வீட்டுப் பெரியவர்கள், உற்றார் உறவினர்கள் முன்னிலையில் இவர்களுடைய திருமணம் கோயிலில் எளிமையாக நடைபெற்றிருக்கிறது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 8-ம் திகதி சென்னையில் நடைபெற உள்ள நிலையில் அதில் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        