நண்பனுக்காக கோவையை அசரவைத்த அம்பானி மகன்! 40 கார்கள், 4 விமானங்கள் என பல்வேறு ஆடம்பரம்
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, நண்பன் ஒருவரது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோவை வந்துள்ளார்.
கோவைக்கு வந்த அம்பானி மகன்
இந்தியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானி சமீபத்தில் தனது இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்தார்.
இந்நிலையில், அவரது மூத்த மகனான ஆகாஷ் அம்பானியும் அவரது மனைவி ஷ்லோகா மேத்தாவும் சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நண்பர் ஒருவரது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தனர்.
நிலச்சரிவில் மொத்த குடும்பத்தையும் இழந்த பெண்ணிற்கு நீங்காத சோகம்.., திருமணம் செய்யவிருந்த இளைஞரும் விபத்தில் மரணம்
கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ரவி மற்றும் சித்ரா தம்பதியின் மகள் நிக்கி என்பவருக்கும், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கோகுல் தாஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இதில், கோகுல் தாஸ் குடும்பத்தினர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் பல்வேறு நாடுகளில் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதில், ஆகாஷ் அம்பானியும், கோகுல் தாஸும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில், தன்னுடைய திருமண வரவேற்பில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று ஆகாஷ் அம்பானியிடம் கோகுல் தாஸ் கேட்டு கொண்டுள்ளார்.
அதன்படி, ஆகாஷ் அம்பானியும் அவரது மனைவியும் செப்டம்பர் 7 -ம் திகதி திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் கோவைக்கு வந்தனர்.
பின்னர் அங்கிருந்து ரிசார்ட்டிற்கு பாதுகாப்பு அதிகாரிகளுடன் சென்றனர். 4 தனி விமானங்கள், 40 கார்கள் என்று கோவைக்கு வந்து கோவையையே அசர வைத்துள்ளனர்.
பின்னர் அன்றைய தினம் மாலையில் மும்பைக்கு தனி விமானம் மூலம் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பலமான பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |