பெற்றோரிடம் இருந்து உத்வேகம் பெற்றது குறித்து மனம் திறந்து பேசிய ஆகாஷ் அம்பானி
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, தனது தந்தை மற்றும் தாயார் நீடா அம்பானியிடமிருந்து உத்வேகம் பெற்றது குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
பெற்றோர் குறித்து உரையாடல்
ஆகாஷ் அம்பானி தனது , தனது பெற்றோருடன் எப்படி வளர்ந்தது என்பது குறித்தும், தனது பணியை குறித்தும் பகிர்ந்துள்ளார்.
ஆகாஷ் அம்பானி டிரீம் ஸ்போர்ட்ஸின் தலைமை நிர்வாகி (CEO) ஹர்ஷ் ஜெயினுடனான உரையாடலின் போது, "நாங்கள் அனைவரும் 32 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தோம். எங்களுக்கு உத்வேகம் ஒரு பெரிய குறையாக இருந்ததில்லை.
முக்கியமாக எங்களுடைய பெற்றோர் இருவரிடமிருந்தும் உத்வேகம் என்பது கிடைக்காமல் இருந்ததில்லை" என்றார்.
அதோடு, வீட்டில் தான் காணுகின்ற ஒழுக்கம் மற்றும் அர்பணிப்பு குறித்தும் பேசினார் ஆகாஷ் அம்பானி. அதுமட்டுமல்லாமல், தனது தந்தை முகேஷ் அம்பானி இரவு 2 மணி வரை வேலை செய்கிறார். எனது தாயார் நீடா அம்பானி கவனிக்கும் சிறிய விவரங்களிலிருந்து உத்வேகத்தைப் பெற முடியும் என்றார் ஆகாஷ்.
ஜியோ இன்ஃபோகாமின் (Jio Infocomm) தலைவராக, 5G, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையம் சார்ந்த விஷயங்கள் (IoT) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் ஆகாஷ் அம்பானி.
மேலும், Jio Platforms Limited மற்றும் Reliance Retail Ventures Ltd. ஆகியவற்றின் குழுவில் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |