இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆகாஷ் அம்பானி பரிந்துரைத்த கோரிக்கைகள்
மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட ஆகாஷ் அம்பானி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் சில கோரிக்கைகள் பரிந்துரைத்துள்ளார்.
ஆகாஷ் அம்பானி பேசியது
இந்திய தலைநகரான டெல்லியில் இன்று மொபைல் காங்கிரஸ் மாநாடு 2024 -யை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வரும் 18 -ம் திகதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியானது ஆசியாவிலேயே நடக்கும் மிகப்பெரிய டெக் நிகழ்ச்சியாகும்.
இந்த மாநாட்டில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மாசானிஜி, டெலிகாம் துறை இயக்குனர் நீரஜ் மிட்டல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்தியா முழுவதும் இருந்து மொபைல் மற்றும் டெலிகாம் துறையை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்தவகையில், ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி கலந்து கொண்டுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், ''தொடர்ந்து 3 -வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். உங்களின் தலைமையின் கீழ் டிஜிட்டல் துறை சர்வதேச தரத்திற்கு உயர்ந்துள்ளது.
8 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 2ஜி தொழில்நுட்பம் இருந்தது. இப்போது 5 ஜி தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்டுள்ளது. 6ஜி சேவையுடன் இந்தியா சாதனைகளை படைக்கும் என்று பிரதமருக்கு நான் உறுதி அளிக்கிறேன்.
AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் இந்திய பயனர்களின் டேட்டாக்களை சேமிக்க இந்தியாவில் டேட்டா மையங்களை உருவாக்க வேண்டும். அதேபோல, தொழில்நுட்ப வளர்ச்சிகள் மிக வேகமாக வளர்ந்து வருவதால் டேட்டா சென்டர் பாலிசி 2020-ஐ மேம்படுத்த வேண்டும்" என்று கோரிக்கைகளை முன்வைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |