கடைசி டெஸ்டில் பும்ராவுக்கு பதில் விளையாடப்போவது யார்? வாய்ப்பில் இளம்வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் பும்ராவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் இடம்பெற வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி ஓவலில் நாளை தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) விளையாட மாட்டார்.
அவரது முதுகைப் பாதுகாப்பது மற்றும் Long-termஐ மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ மருத்துவக்குழு அவரிடம் தெரிவித்ததாக ESPNcricinfo கூறுகிறது.
ஏற்கனவே, ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று தேர்வாளர்கள் முடிவு செய்திருந்தனர்.
எனவே, மூன்று போட்டிகளில் பும்ரா விளையாடியதால் கடைசி டெஸ்டில் அவர் விளையாடாதது ஆச்சரியம் அல்ல.
ஆகாஷ் தீப்
இந்நிலையில் பும்ராவுக்கு பதிலாக ஓவல் டெஸ்டில் யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், இளம் வீரர் ஆகாஷ் தீப்பின் (Akash Deep) பெயர் அடிபடுகிறது.
ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழ்நிலையை கொண்டுள்ளதால் அவர் அணியில் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மேலும், ஆகாஷ் தீப் இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் என மொத்தம் 10 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.
ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில் ஷர்துல் தாகூர், அன்ஷுல் கம்போஜ் இருவரும் பும்ரா, சிராஜை விட குறைவான ஓவர்கள் வீசினாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதே சமயம் பிரசித் கிருஷ்ணா (Prasidh Krishna) முதல் டெஸ்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி மிரட்டினார். எனவே, ஓவல் டெஸ்டில் அவருக்கும் விளையாட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |