ரூ.1 கோடி வருமானம் ஈட்டும் தோசை வியாபாரம்: கோலி - அனுஷ்காவை ஈர்த்த உணவகத்தின் வெற்றி கதை
சிறிய ஆசையில் தொடங்கி விராட் கோலி, அனுஷ்கா சர்மா போன்றோரை கவர்ந்த அகில் - ஷ்ரியா வியாபார சிந்தனை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அகில் - ஷ்ரியா வெற்றி கதை
அகில் ஐயர் - ஷ்ரியா நாராயணா ஜோடி எந்தவொரு வணிக பின்னணியோ அல்லது முதலீட்டாளர்களோ இல்லாமல் பாந்த்ராவில் புதிய தொழில் ஒன்றை துணிச்சலுடன் தொடங்கினர்.
அவர்களின் ஒரே நோக்கம் கர்நாடகாவின் தனித்துவமான மற்றும் மொறு மொறு “தாவங்கரே பாணி தோசைகளை (Davangere-style dosas) மக்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் வழங்குவது மட்டுமே.
ஆரம்பத்தில் வெறும் 12 இருக்கைகளுடன் கூடிய சாதாரண உணவகமாக தொடங்கிய அகில் - ஷ்ரியா ஜோடியின் உணவகம், அன்றிலிருந்து இன்றுவரை உண்மையான சுவைக்கும் மற்றும் தரத்திற்கு சமரசம் செய்து கொள்ளவில்லை.
தம்பதியினரின் நேர்மையான கடின உழைப்பு, அவர்களின் கஃபே-வை தினமும் 800 தோசைகள் விற்பனையாகும் மிகப்பெரிய வணிகமாக மாற்றியுள்ளது.
சிறிய கடையாக தொடங்கப்பட்ட அகில் - ஷ்ரியா உணவகம் இன்று மாதத்திற்கு ரூ.1 கோடி வருவாய் ஈட்டும் வணிகமாக உயர்ந்துள்ளது.
விராட் கோலி - அனுஷ்கா சர்மாவை கவர்ந்த உணவகம்
உணவின் தரம் மற்றும் சுவை குறித்த வாய்மொழி விளம்பரங்கள் மட்டுமே கடைக்கான வாடிக்கையாளர்களை நாளுக்கு நாள் அதிகரிக்க உதவியுள்ளது.
மேலும் உள்ளூர் உணவு பிரியர்கள் முதல் இந்தியாவின் பிரபலங்களான விராட் கோலி - அனுஷ்கா சர்மா போன்றவர்களையும் கடைக்கு ஈர்த்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |