7 பந்துகளில் 3 விக்கெட்டை வீழ்த்தி அசத்திய இலங்கை வீரர்! நிலைகுலைந்த இந்திய பேட்ஸ்மேன்கள்
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 பந்துக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அகிலா தனஞ்சியா அசத்தியுள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையே மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன் படி, இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினர். ஷிகார் தவான் 13 ஓட்டங்களிலும், ப்ரித்வி ஷா 49 ஓட்டங்களிலும், சஞ்சு சாம்சன் 46 ஓட்டங்களிலும் பவுலின் திரும்ப, இந்திய அணி 43.1 ஓவரில் 225 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணியில் அகிலா தனஞ்சியா மற்றும் பிரவின் ஜெயவிக்ரமா தல மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதில் குறிப்பாக, இந்திய அணியின் முக்கிய வீரர்களான சூர்யகுமார் யாதவ்(40), கிருஷ்ணப்பா கவுதம்(2), நிடிஷ் ரானா(7), ஆகியோரை, சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்சியா தான் வீசிய 7 பந்துகளுக்குள் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.
Akila Dananjaya dismissed Suryakumar Yadav, Krishnappa Gowtham and Nitish Rana in the span of just 7 balls?#Cricket #CricTracker #SLvIND #AkilaDananjaya pic.twitter.com/Cv2v5pFeWq
— CricTracker (@Cricketracker) July 23, 2021