ஒரு கப் அரிசி மா இருந்தால் போதும்.., சுவையான அக்கி ரொட்டி செய்யலாம்
கோதுமை மாவில் ரொட்டி சுட்டு சாப்பிட்டு சலித்து போய்விட்டதா? இனி அரிசி மாவில் ரொட்டி செய்து சாப்பிடுங்கள்.
இந்த அரிசி மாவு ரொட்டி காரசாரமான சட்னியுடன் தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.
அந்தவகையில், சுவையான அக்கி ரொட்டி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மா- 250g
- வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 2
- இஞ்சி- 1 துண்டு
- சீரகம்- ¾ ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- கறிவேப்பிலை- 1 கொத்து
- உப்பு- தேவையான அளவு
- வெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி மா, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், கொத்தமல்லி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாழை இலையில் வெண்ணெய் தடவி பிணைந்த மாவை வட்டமாக தட்டி எடுத்துக்கொள்ளவும்.
நன்கு வெந்து வர தட்டிய மாவிற்கிடையில் சிறிய ஓட்டை போட்டுக்கொள்ளவும்.
அடுத்து ஒரு தவாவை அடுப்பில் வைத்து ரொட்டியை வெண்ணெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான அக்கி ரொட்டி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |