நீண்ட நாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அக்ஸர் படேல் அவரின் காதலியை திருமணம் செய்ய உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் மிக இளம் வயதிலேயே இடம்பிடித்த அக்ஸர் படேல் இப்போது டெஸ்ட் அணியிலும் அறிமுகமாகி கலக்கி வருகிறார். துரதிஷ்டவசமாக காயம் காரணமாக அக்சர் படேல் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதேபோல் அடுத்தாக இந்தியாவில் நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
இதனிடையே ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவரை, அந்த அணி சுமார் 9 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பிறந்த நாளை கொண்டாடிய அக்ஸர் படேலின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவரது திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது.
பிரபல உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணராக திகழும் அவரது நீண்ட நாள் காதலி மேகாவுக்கு அவர் மோதிரம் அணிவித்த புகைப்படங்களை அக்ஸர் படேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு இந்திய அணி வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.