கணவர் ரிஷி சுனக்கை விடவும் ரூ 110 கோடி அதிகமாக சம்பாதித்த அக்ஷதா: மொத்த சொத்து மதிப்பு
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி தமது கணவரும் பிரித்தானிய பிரதமருமான ரிஷி சுனக்கை விடவும் ரூ 110 கோடி அதிகமாக சம்பாதித்துள்ளார்.
அக்ஷதா மூர்த்தி ரூ 130 கோடி
2022 மற்றும் 2023 நிதியாண்டில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சுமார் 20 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். ஆனால் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி அதே நிதியாண்டில் ரூ 130 கோடி சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தமது கணவரை விடவும் கூடுதலாக ரூ 110 கோடி அக்ஷதா மூர்த்தி சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, பிரித்தானியாவில் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில், ரிஷி சுனக் - அக்ஷதா தம்பதி மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.
இருவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ 6860 கோடி என்றே தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிஷி சுனக் - அக்ஷதா தம்பதி இடம்பெற்றனர்.
பிரித்தானியாவின் பணக்காரர்கள்
வெள்ளிக்கிழமை வெளியான 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் தரவரிசையில் முன்னேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 275வது இடத்தில் இருந்த ரிஷி சுனக் - அக்ஷதா தம்பதி தற்போது 245வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
அக்ஷதா மூர்த்திக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருக்கும் பங்குகள் காரணமாகவே பிரித்தானியாவின் பணக்காரர்கள் பட்டியலில் ரிஷி சுனக் - அக்ஷதா தம்பதி இடம்பெறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |