வெறுப்பை இந்தியர்கள் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்? கொந்தளித்த நடிகர் அக்ஷய் குமார்
மாலத்தீவுக்கு செல்வதை இந்தியர்களாகிய நாம் தவிர்க்க வேண்டும் என நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
லட்சத்தீவு பயணம்
சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்கு பயணம் செய்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
அத்துடன் அவர் தனது பதிவில், 'லட்சத்தீவு என்பது தீவுகளின் கூட்டம் மட்டுமல்ல. அது, பாரம்பரிய மரபுகள் மற்றும் மக்களின் இயல்பான பண்பின் உண்மை தன்மையை வெளிக்காட்டுவதும் ஆகும். சாகசங்களை விரும்பும் நபர் என்றால், உங்களுடைய பட்டியலில் லட்சத்தீவும் இடம் பெறலாம்' என குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து லட்சத்தீவு இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இந்தியர்கள் பலரும் ஒன்லைனில் லட்சத்தீவு குறித்து தேட ஆரம்பித்தனர்.
ஆனால், மாலத்தீவின் அமைச்சர் மரியம் ஷியூனா இந்த பதிவினை கேலி செய்தார். அதன் பின்னர் சில மாலத்தீவு நெட்டிசன்களும் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி மற்றும் அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டனர்.
அக்ஷய் குமார் கொந்தளிப்பு
இதன் காரணமாக மாலத்தீவை புறக்கணிக்க அழைப்பு விடுக்கும் ஒன்லைன் பிரச்சாரத்தில் பல இந்திய பிரபலங்கள் மற்றும் ஊடக influencers இணைந்தனர். இதனால் சமூக வலைதளத்தில் இந்த விடயம் பற்றி எரியத் தொடங்கியது.
இந்த நிலையில் நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறி கருத்துக்களை அனுப்பும் மாலத்தீவைச் சேர்ந்த முக்கிய பொது நபர்களின் கருத்துக்களைப் பார்த்தேன். அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாட்டிற்கு இப்படி செய்வது ஆச்சரியமாக இருக்கிறது.
அண்டை வீட்டார்களிடம் நாம் நல்லவர்கள் தான், ஆனால் இத்தகைய தூண்டப்படாத வெறுப்பை நாம் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். எப்போதும் அதைப் பாராட்டினேன், ஆனால் கண்ணியம் தான் முதன்மையானது. இந்திய தீவுகளை ஆராய்ந்து நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்போம்' என தெரிவித்துள்ளார்.
Came across comments from prominent public figures from Maldives passing hateful and racist comments on Indians. Surprised that they are doing this to a country that sends them the maximum number of tourists.
— Akshay Kumar (@akshaykumar) January 7, 2024
We are good to our neighbors but
why should we tolerate such… pic.twitter.com/DXRqkQFguN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |