இன்று அட்சய திருதி... தங்கத்தை தவிர வேறு எதெல்லாம் வாங்கினால் செல்வம் பெருகும் தெரியுமா?
அட்சய திருதியை என்பது பிரபலமான இந்து பண்டிகையாகும். சமஸ்கிருதத்தில் அட்சயா என்றால் 'ஒருபோதும் குறைவில்லாத' என்றும், திருதியை என்றால் 'மூன்றாவது' என்றும் பொருள். இந்து நாட்காட்டியில் இது ஒரு நல்ல புனிதமான நாள்.
இது சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை நாளின் மூன்றாவது தினத்தில் கொண்டாடப்படுகிறது. ஒரு வருடத்தில் சந்திரனும் சூரியனும் ஒரே நேரத்தில் பிரகாசத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரே நாள் தான் இது.
எனவே இந்நாளில் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் தரும் என்று மக்களால் நம்பப்படுகிறது. முக்கியமாக அட்சய திருதியை அன்று எந்த ஒரு நல்ல வேலையை தொடங்கினாலும் அது நல்லபடியாக நடப்பதோடு மிகவும் பலனளிக்கும் என்று நம்பப்படுகிறது.
பெரும்பாலும் அட்சய திருதியை நாளில் மக்கள் வீட்டில் அதிகம் செல்வம் சேர வேண்டும் என்று தங்கத்தை வாங்குவார்கள். ஆனால் அட்சய திருதியை அன்று ஒருசிலவற்றை வாங்குவதோடு, ஒருசில பொருட்களை நன்கொடையாக வழங்கினால் நீண்ட ஆயுளையும், செல்வத்தையும், செழிப்பையும் பெற முடியும். அட்சய திருதியை அன்று உங்களால் தங்கம் வாங்க முடியாவிட்டால், வருத்தம் கொள்ள வேண்டாம்.
அந்நாளில் தங்கத்திற்கு இணையான அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரக்கூடிய ஒருசில பொருட்களை வாங்கலாம். இது நிச்சயம் உங்கள் வாழ்க்கையிலும், வீட்டிலும் செழிப்பைக் கொண்டு வரும். இப்போது எந்த மாதிரியான பொருட்களை வாங்கினால் செல்வ செழிப்போடு சந்தோஷமாக இருக்கலாம் என்பதைக் காண்போம்.
பருப்பு வகைகள்
அட்சய திருதியை நாளில் பருப்பு வகைகளை வாங்குவது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. ஏனெனில் இது செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாகும். பருப்பு வகைகள் பணத்தின் அடையாளமாக இருக்கும் சிறிய நாணயங்களை ஒத்திருக்கின்றன.
அதுவும் இந்த பருப்புக்களை நீரில் ஊற வைத்து சமைக்கும் போது, இது செல்வம் அதிகரிப்பதைக் குறிக்கும்.
பச்சை இலைக் கீரைகள்
அடர் பச்சை நிற காய்கறிகள் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் இவை பணத்தைக் குறிக்கின்றன. எனவே அட்சய திருதியை நாளில் இந்த காய்கறிகளை வாங்குவதோடு, எவ்வளவு அதிகமாக சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக பணம் சேரும் என்ற ஒரு விசித்திரமான மூட நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
இதற்கு காரணம் கீரைகள் பணத்தை ஒத்திருப்பது தான்.
தானியங்கள்
அரிசி, பார்லி போன்ற சில தானியங்களை அட்சய திருதியை நாளில் வாங்கலாம். ஏனெனில் இவை நல்ல அதிர்ஷ்டத்தை தரக்கூடியவை. இந்திய புராணங்களின் படி, அரிசி அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் உறிஞ்சி, வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.
எனவே தான் பல இந்திய மத விழாக்களில் அரிசி முக்கியமான ஒரு பொருளாக பயன்படுத்தப்படுகிறது நெய் அட்சய திருதியை அன்று நெய் வாங்குவது நல்லது. இந்து மதத்தில் நெய் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் இது தீய சக்தியை தடுப்பது மட்டுமல்லாமல், நோய்கள், சுகாதார பிரச்சனைகள் மற்றும் எதிர்மறை ஆற்றலைத் தடுக்க உதவுகிறது. அதிலும் நெய் கொண்டு வீட்டில் தீபம் ஏற்றும் போது,
அது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை விலக்கி, நேர்மறை ஆற்றலையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும்.
சந்தனம்
புனிதமான அட்சய திருதியை நாளில் சந்தனத்தை தானமாக வழங்குவது, உங்களுக்கு நிகழவிருக்கும் விபத்துக்களின் அபாயங்களைத் தவிர்க்க உதவுகிறது.
தேங்காய்
அட்சய திருதியை நாளில் தேங்காயை பிராமணர்களுக்கு தானமாக வழங்கினால், உங்கள் முன்னோர்களின் கடந்த கால பாவங்களில் இருந்து விடுபடலாம். மோர் பிராமணர்களுக்கு அட்சய திருதியை நாளில் மோரை தானமாக வழங்கினால், அது ஒருவரை கல்வியில் வெற்றி பெற உதவும் என்று கூறப்படுகிறது.
மோர்
பிராமணர்களுக்கு அட்சய திருதியை நாளில் மோரை தானமாக வழங்கினால், அது ஒருவரை கல்வியில் வெற்றி பெற உதவும் என்று கூறப்படுகிறது.