அட்சய திருதியை அன்று தங்கம் விலை உயருமா? குறையுமா?
அட்சய திருதியை 2026 நெருங்கி வருவதால், அனைவரின் கவனமும் தங்கம் விலை பக்கம் திரும்பியுள்ளது.
2026 ஆம் ஆண்டில் அட்சய திருதியை ஏப்ரல் 19ஆம் தேதி வருகிறது.
இந்த நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுவதால், ஆண்டுதோறும் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும்.
மார்ச் மாதத்தில் தங்க விலையில் ஏற்றத் தாழ்வுகள் இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் சற்று உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பண்டிகை நெருங்கும் போது தேவை அதிகரிப்பதால், விலையும் ஓரளவு உயரும்.
தங்க விலையை பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று Federal Reserve வட்டி விகிதம்.
தற்போது வட்டி விகிதங்கள் உயரமாக இருப்பதால், தங்கத்தின் தேவை சற்று குறையலாம். ஆனால் வட்டி விகிதம் குறையும் எதிர்பார்ப்பு இருந்தால், தங்க விலை உயர வாய்ப்புள்ளது.
மேலும், அமெரிக்க பணவீக்கம், டாலர் மதிப்பு, உலக அரசியல் சூழ்நிலை போன்றவை தங்க விலையை பாதிக்கின்றன.
இதனால் இந்த ஆண்டு பெரிய அளவில் விலை உயர்வு இருக்காது. சிறிய உயர்வு அல்லது நிலைத்த நிலை இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதன்படி, இந்த ஆண்டு அட்சய திருதியைக்கு தங்க விலை மிக அதிகமாக உயரும் வாய்ப்பு குறைவு.
ஆனால் சிறிய உயர்வு இருக்கும். அதனால் முன்கூட்டியே திட்டமிட்டு வாங்குவது பாதுகாப்பான தேர்வாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |