நாளை கரையை கடக்கும் அக்வான் புயல்.., எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
Akvan cyclone crosses coast tomorrow- வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் பாதை மாறிய நிலையில், நரசாபூர் - பூரி இடையே நாளை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் உருவான அக்வான்’ புயல், தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது.
இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை நண்பகல் நரசாபூர் - புரி இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும்.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும், சென்னை உட்பட ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும், வரும் 23ஆம் திகதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களிலும், விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் 24ஆம் திகதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |