வங்கக்கடலில் இன்று உருவாகும் அக்வான் புயல்.., தீவிர புயலாக மாறும்
Akwan cyclone forming in bay of bengal today- வங்கக்கடலில் இன்று உருவாகும் அக்வான் புயல் தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
வங்கக்கடலில் இன்று உருவாகும் அக்வான் புயல் செவ்வாயன்று தீவிர புயலாக மாறும்.
அர்னாப் புயல் அடுத்த 2 நாள்களில் மேலும் வலுப்பெற்று வட-மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும்.
இதனிடையே, கேரளக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் , கடலூர், மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் புதன்கிழமை கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி மணிக்கு 60km வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |