இந்திய புலம்பெயர் குடும்பம் மரணமடைந்த விவகாரம்: கனேடிய படகு சாரதி சடலமாக மீட்பு
கனடாவில் கடந்த மார்ச் மாதம் இந்தியர்கள் உட்பட 8 புலம்பெயர் மக்களின் சடலத்தின் அருகே காணப்பட்ட படகின் சாரதி தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலம்பெயர் மக்களின் சடலம்
கடந்த மார்ச் மாதம் St. Lawrence நதிக்கரையில், 8 புலம்பெயர் மக்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதில் நால்வர் இந்தியர்கள் எனவும் எஞ்சியவர்கள் ரோமானிய வம்சாவளி எனவும் உறுதி செய்யப்பட்டது.
@CP
அவர்களுடன் காணப்பட்ட படகானது Akwesasne பகுதியை சேர்ந்தவருடையது என கண்டறியப்பட்ட நிலையில், மாயமான அந்த நபரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
கேசி ஓக்ஸ் என்ற 30 வயதான அந்த நபர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. நதியில் இருந்து இந்த மாத துவக்கத்தில் மீட்கப்பட்ட சடலமானது, தேடப்பட்டுவந்த Akwesasne படகு சாரதி கேசி ஓக்ஸ் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
படகு சாரதி கேசி ஓக்ஸ்
மேலும், ஓக்ஸ் மற்றும் 8 புலம்பெயர்ந்தோர் மரணம் குறித்து விசாரணை குறித்து மேலதிக தகவல் ஏதும் தங்களிடம் இல்லை எனவும் பூர்வகுடி கவால்துறை அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
@ctvnews
ஓக்ஸின் சடலமானது ஜூலை 3ம் திகதி ராஸ் தீவுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. முன்னதாக St. Lawrence நதிக்கரையில் மீட்கப்பட்ட இந்தியர்கள் நால்வரின் சடலமானது குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |