ஆண்டுக்கு 100 மில்லியன் யூரோ... சவுதி அரேபிய கால்பந்து அணியால் நெய்மர் பெறும் தொகை
சவுதி அரேபியாவின் அல் ஹிலால் அணிக்காக பிரேசில் கால்பந்து உச்ச நட்சத்திரம் நெய்மர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கால்பந்து உலகில் சாதனை
சனிக்கிழமை சுமார் 68,000 பேர்கள் அமரக்கூடிய சர்வதேச விளையாட்டு அரங்கம் ஒன்றில் நெய்மருக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளனர்.
Things you love to see ?#AlHilal ?@neymarjr ?? pic.twitter.com/Q5aIXY8sqZ
— AlHilal Saudi Club (@Alhilal_EN) August 19, 2023
31 வயதாகும் நெய்மர் கடந்த 2017ல் கத்தார் கோடீஸ்வரர் ஒருவருக்கு சொந்தமான PSG அணியில் இணையும் போது பெருந்தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2017ல் 242 மில்லியன் டொலர் ஒப்பந்தம் என்பது கால்பந்து உலகில் சாதனையாக பார்க்கப்பட்டது.
PSG அணிக்காக 173 ஆட்டங்களில் களமிறங்கிய நெய்மர் 118 கோல்கள் பதிவு செய்துள்ளார். தற்போது அல் ஹிலால் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நெய்மர் ஆண்டுக்கு 100 மில்லியன் யூரோ தொகையை ஈட்டுவார் என்றே கூறுகின்றனர்.
M77 ???#AlHilal ? pic.twitter.com/9BpGBcf3H4
— AlHilal Saudi Club (@Alhilal_EN) August 19, 2023
இந்த ஒப்பந்தம் காரணமாமாக PSG அணி நிர்வாகம் 100 மில்லியன் யூரோ தொகையை கைப்பற்றுகிறது. அல் ஹிலால் அணிக்காக வியாழக்கிழமை முதல் முறையாக விளையாட இருக்கிறார் நெய்மர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |