ரொனால்டோவுக்கு போட்டியாக மெஸ்ஸியை மிகப்பெரிய தொகைக்கு வாங்கும் சவூதி அணி? வெளியான தகவல்
சவூதி அரேபியாவின் அல் ஹிலால் அணி லயோனல் மெஸ்ஸியை மிகப்பெரிய தொகைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரேபிய அணியில் ரொனால்டோ
அல் நஸர் கிளப் அணி போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை, ஆண்டுக்கு 173 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்தது.
அதனைத் தொடர்ந்து ரொனால்டோ முதல் முறையாக ஐரோப்பாவுக்கு வெளியே ஒரு கிளப் அணியில் விளையாட உள்ளார். அவர் ஐரோப்பாவில் சாதிக்க வேறு எதுவும் இல்லை என்றும், புதிய சவாலுக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
@FAYEZ NURELDINE/AFP/AFP via Getty Images
இந்த நிலையில், அல் ஹிலால் என்ற சவூதி அரேபியாவின் மற்றொரு கிளப் அணி, ரொனால்டோவின் போட்டி வீரராக கருதப்படும் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சந்தேகத்தை கிளப்பிய ஜெர்சி
இதற்கு காரணம் அந்த அணியின் நீல நிற ஜெர்சி, மெஸ்ஸியின் பெயருடன் '10' என்ற எண் அச்சிடப்பட்டு விற்பனை தயாராக கடைகளில் உள்ளது தான்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மெஸ்ஸியை அல் ஹிலால் அணி வாங்க உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.
அதிலும் குறிப்பாக ரொனால்டோவை விட இருமடங்கு ஊதிய ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.